நாட்டை காக்கும் வேள்வியில் நானும் உள்ளேன் : கமல்ஹாசன் பேட்டி

0 264
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2 திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிடுகின்றது. இதில் திருச்சி வேட்பாளராக துரைவைகோ போட்டியிடுகின்றார்.

அவரை ஆதரித்து இன்று மாலை மக்கள் நீதி மையத்தில் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீரங்கத்தில் உள்ள ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் மேற்கு உள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மக்கள் நீதி மையத்தில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் கட்சியினர் அவரை திரளாக வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர்.

தேர்தல் ரொம்ப சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பழைய கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை பாரத பிரதமர் யாராயிருந்தாலும் அங்க இருந்து தான் பேசுவார்கள், அதற்கும் மூத்தது இந்த செயின்ட்ஜார்ஜ் கோட்டை, இரண்டுக்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை அந்த கோட்டை DMK கோட்டையாக உள்ளது. அந்த கோட்டையில் எனக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. நான் வந்திருக்கிறேன் நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன்.

திருச்சி திருப்பு முனை என்ற கூறுவார்களே என்ற கேள்விக்கு?

மிகையான வார்த்தை அல்ல,  நேர்மையான நம்பிக்கை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.