குணசீலம் பகுதியில் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப்.3 திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிடும் அருண் நேருவுக்கு ஆதரவாக நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி வைத்தார்.