மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி : பூட்டு போட்டு அதிகாரிகள்

0 222
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது. இந்த கடைகளில் 20 கடைக்காரர்கள் 3மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர் இதனால் சுமார் 10 லட்சம் முதல் 14 லட்சம் வரை வாடகை பாக்கி உள்ளது.

ஒரு கடைக்காரர் மட்டுமே மூன்று மாதம் மட்டும் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடைகளுக்கு அதிகாரிகள் உரிய நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி
உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன்குமார், ராஜேந்திரன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட உதவி அலுவலர் குமரேஷ் ஆகியோர் கடைக்குச் சென்று கடைகளை பூட்டு போட்ட போட்டனர்.

தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் பகுதியை சுற்றி உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.