தொட்டியம் பகவதி அம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா
திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷே விழா முடிவுற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் முன்பாக தொட்டியம் சிவன் கோயில் சிவாச்சாரியார் சேனாதிபதி குருக்கள் குழுவினர் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, கலசபூஜை, பூர்ணாஹாதி, மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பகவதி அம்மனுக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் தொட்டியம் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.