முசிறி அங்காளம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்
திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டம், முசிறி அங்காளம்மன் கோயிலில் அங்காளம்மன் சுவாமிக்கு விவசாயம் செழிக்க வேண்டி வெற்றிலையால் அலங்காரம் செய்யப்பட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முசிறி அங்காளம்மன் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜை பக்தர்களால் செய்யப்படுகிறது.
இந்நிலையில் விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வேண்டியும் அங்காளம்மன் சுவாமிக்கு வெற்றிலையால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.