பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க துணை நிற்கும் : பேரூராட்சி நிர்வாகம் வாக்குறுதி
திருச்சி, ஜூன் 25 காட்டுப்புத்தூர் பேரூராட்சி 10 வது வார்டு பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் துணை நிற்கும் – வார்டு உறுப்பினர் ராஜினாமா செய்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை சந்தித்து வாக்குறுதி.
காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் 10 வது வார்டு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களை சந்தித்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் 10வது வார்டு உறுப்பினர் கருணாகரன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் பேரூராட்சியின் துணை தலைவர் சுதா சிவா செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 10 வது வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்தனர்.
அப்போது பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே .என். நேரு மற்றும் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆகியோரின் உதவியோடு செய்து தரப்படும்.தேவையற்ற வதந்திகளையும், தவறான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். நிகழ்வின்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.