ரெயில் தண்டவாளத்தில் சிக்கி முதியவர் பலி

0 503
Stalin trichy visit

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சர்ச்சில்துரை(76). இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்தார். இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையம் வந்தது.

அப்போது சர்ச்சில் டீ குடிப்பதற்காக ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். டீ குடித்துவிட்டு மீண்டும் ரெயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாரதவிதமாக தடுக்கி கீழே விழுந்தார். இதில் தண்டவாளத்துக்கும், ரெயில்பாதைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.