அரசு உதவி பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 15 தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட அசுர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் எனும் அற்புதமான திட்டத்தினை துவக்கி வைத்தார் மேலும் இதனை அடுத்து தமிழக முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஊரகப் பகுதிகளில் உள்ளபள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்தார்
மேலும் இதனை அடுத்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ முருகன் அரசு உதவி பெறும் பள்ளியில் திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும் இப்பள்ளியில் 64 மாணவ மாணவிகள் படித்து வருவதாகவும் இந்த 64 மாணவ மாணவிகளுக்கு அன்றாடம் காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் .
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் சுமதி உட்பட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தாசில்தார் ஜெயபிரகாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் , தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், அசுர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி குமரகுரு உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்