DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

0 218
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15  சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம். மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த டிட்டோஜாக் ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று மதியம் 3 மணிக்கு நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், டிட்டோஜேக் மாநில அமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வந்தது. இது குறித்து கடந்த மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியுடன் டிட்டோஜேக் அமைப்பினர் நேரடியாக பேசி விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு டிட்டோஜேக் அமைப்பினர் பேசினர்.

அரசாணை 243 ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த கோரி வரும் ஜூலை 29 30 31 ஆகிய மூன்று நாட்கள் சென்னை TPI வளாகத்தை தொடர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.