காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் எம்.பி. கலந்துரையாடல்

0 314
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 19  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில்.

திருச்சி மெயின்காட் கேட் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் நேற்று  காலை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசி காந்த் செந்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடனான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் நாளை திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்திடவும் பங்கேற்கவும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார் வடக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தெற்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருச்சி மாணவர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கோட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.