திருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, ஜூலை 18 திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் “தொழில்துறை 5.0” என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் அதிபர் அருட்தந்தை பவுல்ராஜ் மைக்கேல் தலைமை தாங்கினார். செயலர் அருட்தந்தை அமல் மற்றும் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த தேசிய கருத்தரங்கில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குற்றவியல் சட்டங்களை திருத்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்
90% பழைய சட்டங்களாக இருந்தாலும் பல சட்டங்களை மாற்றி உள்ளனர்
இது இந்திய நியாய முறைப்படி மாற்றி உள்ளதாக கூறியுள்ளனர்
ஆனால் இது மனு ஶ்ருமிதிக்கு போகக்கூடிய முதல் படி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விலக்கிவிட்டு
மனுஸ்ருமிதி சட்டத்தை கொண்டு வரும் முதல் படியாக இதை பார்க்கிறேன் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்
ஆருத்ரா விஷயத்திற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது இது பல பேருக்கு தெரியும் போலீஸும் விசாரணை மேற்கொண்டு வருகிறது
இதில் பல பாஜக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர்
இந்திரா விஷயத்தை எடுத்தால் பல கிரிமினல் ஆக்டிவிட்டீஸ் வெளியே வரும்
இதைக் கூறும்போது அண்ணாமலை அளவு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபடுகிறார் எனவே அதில் ஏதோ உள்ளது என தெரிவித்தார்