“சேதி சொல்லும் தேதி” நூல் வெளியிட்டு விழா
திருச்சி, ஜூலை 20 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட “மாவட்ட பிரதிநிதிகள்” சார்பாக நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேலச்சிந்தாமணி சிதம்பரம் மஹால் மாணவர்களிடையே வினாடி வினா போட்டிகள் – சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு – சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு , தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
மாணவ மாணவியருக்கு தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா பரிசுகள் வழங்கினார்.
நிறைவாக கேபிள் N.மோகன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர் மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் ஜான்செல்லதுரை KA.ராஜேஷ் மூ.கா.முகேஷ்குமார்
மாவட்ட பிரதிநிதிகள், பகுதி கழகச் செயலாளர் மோகன் பா.விஜயபாலன் K.N.நலங்கிள்ளி R.அருண்சன்னாசி P.மணிகண்டன் V.கண்ணதாசன் P.கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.