வேளாண்துறை அலுவலக வளாகத்தில் பாம்பு : போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, ஜூலை 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாளாகத்தில் தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தோட்டக்கலை துறை, வேளாண்துறை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அலுவலகம், கால்நடை மருந்தகம் ஆகியவை உள்ளது. ஆனால் வளாகம் பெரும்பாலும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இந்நிலையில் இன்று காலை வேளாண்துறை அலுவலகம் அருகே பாம்பு செல்வதை அறிந்த மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு திரையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது பாம்பு போக்குகாட்டி அங்கும் இங்குமாக சென்று வேடிக்கை காட்டியது. கடைசியாக தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி சுமார் 6 அடி நீள கருஞ்சாரைபாம்பை பிடித்து எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர். அதிக அரசு அலுவலகங்கள் உள்ள முக்கிய பகுதியில் பாம்பை கண்ட மக்கள் பதற்றம் அடைந்து ஓடினர்.