மணப்பாறை அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்சி, ஜூலை 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர்கோவிலில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. கண்ணுடையான்பட்டி கலிங்கப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ மனுக்கள் குறித்த அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் முகாமில் மனு அளித்து தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு நகலை வழங்கினார். இதில் வருவாய்த்துறை, கூட்டடுறவுத் துறை, மின்வாரியத்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த பொதுமக்களின் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய துணைத்தலைவர் புவனேஸ்வரிமணி, கண்ணுடையான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணிமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மரியபாக்கியராணி, காமராஜ், கலிங்கப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.