சினிமா எடுப்பதாக நாடகமாடி கேமராவை கொள்ளையடித்த 3 பேர் கைது 

0 656
Stalin trichy visit

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிராஜ்(26). சென்னையில் உதவி கேமராமேனாக உள்ள இவரிடம் திருச்சி உறையூரைச் சேர்ந்த முஸ்தபா(31) என்பவரும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஏழுமலை(48) என்பவரும் மும்பை கோலி வாடாவில் உள்ள சையன்பகுதியை சேர்ந்த ஜெயராம்(31) மற்றும் தீபன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சினிமா படம் எடுப்பதாக கேமராவை வாடகைக்கு கேட்டு உள்ளார்கள்.

இதனை நம்பி அபிராஜ் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தனது கேமரா லென்சை சென்னையில் இருந்து எடுத்து வந்து கடந்த 7ம் தேதி அவர்கள் கூறிய புலிவலம் அருகே இலுப்பையூர் சென்று கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு சினிமா எடுப்பது போல் நாடகமாடி 4 பேரும் சேர்ந்து கேமராவை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அபிராஜ் கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மது விலக்கு அமல் பிரிவு பொறுப்பு முத்துராசு மேற்பார்வையில் புலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முஸ்தபா, ஏழுமலை ஜெயராம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்கள் வசமிருந்த கேமரா லென்சை பறிமுதல் செய்தனர். பின்பு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.