தீரன் சின்னமலை நினைவு நாள் : சோழிய வெள்ளாளர் சங்கம் மாநிலத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

0 500
Stalin trichy visit

திருச்சி, ஆக. 3  தியாகி தீரன் சின்னமலை 219வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் செந்தில் பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை  219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்  சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் மாணிக்கம், மாநில பொருளாளர் பாடலூர் மாணிக்கம் மாநில துணைச் செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல் . மகாலிங்கம், டைமன் பாலு மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க ரத்தினகுமார் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வஉசி கண்ணன், மாநகர துணை அமைப்பாளர்கள் : சேதுராமன், செல்வராஜு, திருவரம்பூர் விஜயகுமார் மனோஜ்குமார், பகுதி நிர்வாகிகள், -சக்திவேல், ஸ்டாலின், மலர்மன்னன், கனிவண்ணன், வாத்தியார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.