ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக நடந்த கோகுலாஷ்டமி விழா: கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

0 29
Stalin trichy visit

ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக நடந்த கோகுலாஷ்டமி விழா: கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்!

பூவுலகில் அதர்மம் ஓங்கும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும், தீமையை அழிக்கவும் இறைவன் பல்வேறு யுகங்களில் அவதரிக்கிறான்; அந்த வகையில் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம். மகாவிஷ்ணு உலகைக் காக்க எடுத்த அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இந்த நன்னாளையே நாம் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி வருகிறோம்.

இந்தப் புனித நாளில் முழு மனதுடன் விரதமிருந்து கண்ணனை வேண்டினால், அவன் நம்மைத் தீமைகளிலிருந்து காத்து அருள்வான் என்பது ஐதீகம். கிருஷ்ணரின் மீது தீவிர பக்தி கொண்ட பலரும், இந்த நாளில் உணவு மற்றும் நீரின்றி கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ‘ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலையா’ கலை மாமணி ரேவதி முத்துசாமி  இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாணவிகள் அனைவரும் கிருஷ்ணர், ராதை மற்றும் கோபிகைகள் போல் வேடமணிந்தும், பிஞ்சு நெஞ்சங்கள் குழந்தை கிருஷ்ணர் அலங்காரத்திலும் கலந்து கொண்டு விழாவை வண்ணமயமாக்கினர்.

Leave A Reply

Your email address will not be published.