ஒன்றிய அரசை கண்டித்து 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – துவரங்குறிச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்தாலோசனை!

0 735
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் , மணப்பாறை சட்டமன்ற மருங்காபுரி தொகுதி உட்பட்ட ஒன்றிய ,நகர, பேரூர், ஊராட்சி, நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணையின் படி கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

மத்திய அரசின்  பெட்ரோல் , சமையல் சிலிண்டர் கேஸ் எரிவாயு விலைவாசி உயர்வு ஆகியவைகளை கண்டித்து துவரங்குறிச்சி M.J மஹாலில் ஒன்றிய செயலாளர் சின்னடைக்கன், ஒன்றி பெருந்தலைவர் பழனியாண்டி , அவைத்தலைவர் ரொக்கையா மாலிக் , மாவட்ட இலக்கிய மற்றும் பகுத்தறிவு அணி சுந்தர்ராஜன் நகர தலைவர் பழ.கருப்பையா, இளைஞர் அணி ராஜாமுகமது மற்றும் முருகேசன், Ex சேர்மன் செந்தில்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசை கண்டித்து , மாநில தழுவிய கருப்பு கொடியேந்தி நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டம் பற்றிய மற்றும் கட்சி சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.