100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் மனு கொடுக்கும் போராட்டம்

0 289
Stalin trichy visit

திருச்சி, ஆக. 7  மணப்பாறையில் நூறுநாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று  நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்சக்தி (எ) பழனிச்சாமி தலைமையிலும் ராமசாமி, அம்மாக்கண்ணு, ஆரோக்கியம், பாலுசாமி, செந்தாமரை, மரிய டெய்சிராணி, வெள்ளக்கண்ணு, வேளாங்கண்ணி,.சின்னத்தங்கம், பழனியம்மாள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற போராட்டத்தில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும், வேலை வழங்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். ஊர்வலத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.‌

பின்னர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
பாஸ்கர், மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், ஏஐடியூசி போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணி விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகானந்தம், மாவட்டச்செயலாளர் கணேசன், சிபிஐ நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன், வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் வட்டாட்சியர் செல்வத்திடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். இதில் 200 கற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.