கலைஞர் நினைவு நாள் : மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக. 7 திருச்சியில் முத்தமிழ அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், கழக நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம், காஜாமலை விஜி, விஜயா ஜெயராஜ், அம்பிகாவதி, பேரூர் தர்மலிங்கம், கண்ணன் செவந்தி லிங்கம், துர்கா தேவி ,ராம்குமார், மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜ், கமல் முஸ்தபா கனகராஜ், பீ ஆர் பாலசுப்ரமணியன், ராமதாஸ், தர்மசேகர் வழக்கறிஞர் மணிவண்ண பாரதிமத்திய மாவட்ட மகளிர் அணி கவிதா, பந்தல் ராமு , சர்ச்சில் தஸ்தகீர், முகுந்தன், மாணிக்கம்,ஆதி நாயகி ரவி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்