மணப்பாறையில் தாய் பால் வார விழா நிறைவு நாள்
மணப்பாறையில் தாய் பால் வார விழா நிறைவு நாளில் தாய்மார்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்கிய தன்னார்வ அமைப்பினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை லயன்ஸ் சங்கம் சார்பில் தாய்ப்பால் வாரத்தின் நிறைவு நாளான இன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கத் தலைவர் கிராண்ட் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் தாய்மார்கள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக வந்துள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் அதனால் குழந்தைகளுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்தும் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் குறித்த சந்தேகங்களை போக்கும் வகையில்தலைமை மருத்துவர் தமிழ்மணி மற்றும் மகப்பேறு சிகிச்சையில் அனுபவமிக்க மருத்துவர்கள் தாய்மார்களிடம் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள 70 தாய்மார்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் செயலாளர் அம்மையப்பா செல்வம், பொருளாளர் கேபிள் மாலிக், இணைச்செயலாளர் பாலச்சந்திரன், மாவட்ட அமைச்சரவை இணைச் செயலாளர் ஏ.ஆர்.எஸ். சேகர், வட்டாரத் தலைவர் ஜெரால்டு அந்தோனி ததெயு, இயக்குனர் கார்த்திக்கேயன், முத்து, துணைத் தலைவர் கண்ணன், உறுப்பினர் சேர்க்கை தலைவர் தமிமுல் அன்சாரி, செய்தி தொடர்பு அலுவலர் ராமன், பாலமுருகன், நல்லையா மதிவாணன், சந்திர பிரபு உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.