தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் : பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்
திருச்சி, ஆக. 8 திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்
திருச்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
திமுக மக்கள் விரோத செயல்களில் ஈடுப்பட்டு வருகிறது. அதில் 30 ஆண்டு பயணித்துள்ளேன். பிரச்சனை வரும்போது புதிய வழிமுறை கண்டுபிடிப்பார்கள். கடந்த 12 நாட்களாக திமுக அரசு தமிழகத்தில் அரங்கேற்றி வருகிறது பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை என்று கூறி வருகிறது.
மாநில அரசு சர்வ அதிகாரம் பெற்ற கட்சி போல காட்டிக் கொண்டு, இப்போது ஏன் பிச்சைகாரர்கள் போல கொடுக்கவில்லை என்று கூறி வருகிறீர்கள். கெடுப்பவர்கள் யார் என கூறுங்கள். புதிய வரிசுமைகளை மறைப்பதற்கு நீங்கள் நடிக்கும் நாடகம். கடந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளது போல இப்போது எந்த துறைக்கு தரப்படவில்லை என கூறுங்கள்.
இதுவரை கொடுத்த நிதிக்கு கணக்கு எங்கே. ஊழல் பணத்தை மறைக்க ஐஏஎஸ் இல்லை.
ஏதற்காக ஐஏஎஸ், காவல் துறை அதிகாரிகள் மாற்றம் . அனைத்து வரியை கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டார்கள் என மத்திய நிதி அமைச்சர் கூறிவிட்டார்.
தெலுங்கு தேசம், பிஜேபி இணைந்து போட்டியிடும் போது அமராவதி தலைநகராக கொண்டு செயல்படும் என தெரிவித்தப்பட்டது. அதன்படி சிறப்பு நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை 3மாநிலமாக பிரிக்க வேண்டும். சேலம், திருச்சி என தலைநகராக பிரி அப்போது நிதி கேட்டு பெற்று கொள். அப்போது நாங்கள் 3மாநிலத்திற்கு 45ஆயிரம் வழங்க முடியும்.
தமிழகத்தில் பெருபான்மையான பூத்துக்களில் முதல் இடத்தையும், 2ம் இடத்தையும் பெற்றுள்ளோம். அயலாக அணி எதற்கு? போதை மருந்து கடத்த பயன்படுத்தும் அணியாக உள்ளது. Pay and Service கட்சியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட். உள்ளது. மாதம், மாதம் டிவிடெண்ட் வாங்கும் கட்சியாக உள்ளது. 11 மருத்துவ கல்லுரிக்கு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
எய்மஸ் மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. மத்திய அரசின் வலிமையை குறைத்து கட்டினால் அது தேச விரோதம் தான். உண்மை வெளி கொண்டு வரவே இந்த செய்தியாளர் சந்திப்பு
வயது வரம்பு குறைப்பது. பணி கொடை இதுவரை வழங்கவில்லை.
தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம். இதனை மடை மாற்றம் செய்ய தான். உதயநிதி துணை முதல்வர் ஆக்கினால் என்ன தப்பு, முதல்வராக வருபவர் அறிவாளி இல்லை. எனவே அதனை பெரிதாக நினைக்கவில்லை. டேப்பா காட்டி ஆளும் இருக்கிறார். இப்போ டேப்பா இல்லாத முதல்வர் வரட்டும். தத்தி என ஸ்டாலினை குறித்து என்னிடம் கருணநிதி கூறினார். பின்னர் அவரை முதல்வராக ஸ்டாலினை ஆக்கினார். முதல்வரை பற்றி எதிரிராக பேசினால் வழக்கு தொடுக்கப்படுகிறது. டப்பிப் கொடுத்தவர் மீது வழக்கு. அவர்கள் பேசிய பேச்சுக்கு வழக்கு போட்டால் ஸ்டாலின் 10வருடம் சிறைக்குள் இருக்க வேண்டி வரும்.
பொன்முடி வழக்கு வந்த போது மத்திய அரசை குற்றவாளி என் போல காட்டியது. உச்சநீதிமன்றம் விடுவித்த போது மத்திய அரசு மீது பேச்சு இல்லை.
நீதிமன்றம் மீது எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. பல ஊழல் செய்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என மத்திய அரசின் மீத வெறுப்பின் காரணமாக 40தொகுதியை அவர்களுக்கு கொடுத்து விட்டார்கள் என்பது என் கருத்து. கட்சியின் கருத்து அல்ல.
பாரத ஜனதா கட்சியின் ஒரே லட்சியம் என்னவென்றால் திமுகவை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்பது மக்கள் நினைப்பாக உள்ளது. தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்பது பிஜேபியின் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்.