பெரியார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி, ஆக.9 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநர் அ.கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் நாள் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், விருதுகள் வழங்குவதும் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு கீழ்கண்ட விருதுகள் பல்கலைக்கழக விதிகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-2022, 2022-2023, 2023-2024 ஆண்டுகளுக்கான பெரியார் பிறந்தநாள் விருதுகள் இவ்வாண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ளது.
பெரியார் சிறப்பு விருது: பொற்கிழி: ரூ.1,00,000 (மூத்த பெரியாரியல் அறிஞர் ஒருவருக்கு), பெரியார் விருது: பொற்கிழி: ரூ.50,000 (பெரியாரியல் அடிப்படையில் சமூகப்பணியாற்றும் ஒருவருக்கு) பெரியார் பரிசு: பொற்கிழி: ரூ. 50,000. (பெரியாரியல் தொடர்பாக குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த ஒரு நூலின் ஆசிரியருக்கு)
மேற்கூறிய விருதுகளுக்கு முனைவர். அ. கோவிந்தராஜன், இயக்குநர். பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024 என்ற முகவரிக்கு வரும் ஆக.16 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.