எஸ்.ஆர்.எம். குழும கல்வி வளாகத்தில் தொழில்நுட்ப பட்ட படிப்பிற்கான தொடக்க விழா

0 327
Stalin trichy visit

திருச்சி, ஆக. 9  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்..ஆர்.எம் குழும கல்வி வளாகத்தில் உள்ள TRP அரங்கில்
SRM இராமாபுரம் குழுமத்தின் தொழில்நுட்ப பட்ட படிப்பிற்கான 2024-2025 ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் சக்தி கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் தலைவர் டாக்டர் சிவகுமார் ஆற்றிய தலைமையுரையில் இலக்குடன் முன்னேறிச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

துணைத்தலைவர் நிரஞ்சன் சிறப்புரையாற்றி நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்.
துணைவேந்தர் டாக்டர் முத்தமிழ்செல்வன் தனது உரையில் மாணவர்களுக்கான வாய்ப்புகளை வலியுறுத்தினார்.

தலைமை தாங்கிப்பேசிய முதன்மை விருந்தினர் அம்ரித் சஞ்சீவ் தனது உரையில் எதிர்மறை விஷயங்களை களைந்து, தோல்வி கண்டு தளராது, ஆற்றலை வளர்த்துக் கொண்டு முன்னேற மாணவர்களுக்கு அறிவுரை தந்தார்.

சென்னை மற்றும் திருச்சி வளாகத்தின் முதன்மை இயக்குனர் டாக்டர் N. சேதுராமன் ஆற்றிய சிறப்புரையில் மாணவர்கள் முனைப்புடன் முன்னேறிச்செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

கணினி மற்றும் தொழில்நுட்பத்துறையைச்சார்ந்த பழைய மாணவர்கள் சுவாமிநாதன் மற்றும் சிங்காரம் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தங்கள் வாழ்வு SRM வளாகத்தில் உருவான விதத்தை நினைவு கூர்ந்தனர்.
கல்வி முதன்மையர் வழங்கிய நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.