பாபுரோட்டை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து : மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 227
Stalin trichy visit

திருச்சி, ஆக.10  திருச்சி பாபு ரோட்டை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மமக மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி பாபு ரோட்டில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு சீரமைக்காமல் குண்டும் குழியுமான சாலை மூலம் பொதுமக்களை வஞ்சிக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 14வது வார்டு பகுதி வாசிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இபி ரோடு முருகன் தியேட்டர் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் 14 வது வார்டு தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முகமது ராஜா மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.