கருமண்டபம் JRS நகரில் குடியிருப்போர் நலச்சங்கத்தில் சுதந்திர தின விழா

0 397
Stalin trichy visit

திருச்சி, ஆக. 15  கருமண்டபம் JRS நகரில் குடியிருப்போர் நலச்சங்கம் கொண்டாடிய 78ஆவது சுதந்திர தின விழா

நமது இந்திய திருநாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா, கருமண்டபம் வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜெ.பி. நகர், ஜெ.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

கருமண்டபம் JRS நகரில் நலச்சங்க தலைவர் முனைவர் ராஜரத்தினம்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 55ஆவது மாமன்ற உறுப்பினர் ராமதாஸ்  முன்னிலை வகிக்க, நலச்சங்க துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி  வரவேற்று பேசினார்.

55ஆவது மாமன்ற உறுப்பினர்  நலச்சங்கத்தின் பணிகள் குறித்ததும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பேசினார். மேலும் ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும் நமது நலச்சங்கம் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார்.

நலச்சங்கத்தின் பகுதியில் வசித்து வரும்ஜான் பீட்டர் அருளானந்தம் (ஆசிரியர் ஓய்வு) தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர வரலாறு மற்றும் பெருமை குறித்து சிறப்புரை ஆற்றினார்.நலச்சங்க தலைவர் Dr.ராஜரத்தினம், நலச்சங்கம் கடந்து வந்த பாதையும் தற்போதைய நிலைமை குறித்தும் தலைமை உரையில் விவரித்தார்.

நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவரும் முன்னாள் செயலாளரும் அந்தோணிசாமி மற்றும் . ஜான் பிரகாஷ் எபிநேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நலச்சங்கத்தின் செயலாளர் திரு.அக்பர் ஹூசைன் அவர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கையின் பேரில் மின் கம்பம் நிறுவுதல், மின் விளக்கு பொறுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகள் குறித்தும் பேசினார்கள்.

மாமன்ற உறுப்பினர்  ராமதாஸ் , தேசியக்கொடி ஏற்றிவைத்த ஜான் பீட்டர் அருளானந்தம்  ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.

நமது நலச்சங்க பகுதியில் வசிக்கும் Dr அன்னி பிரின்சி அனைத்திந்திய Ayush PG நுழைவுதேர்வில் (AIAPEGT 2024) மாநில அளவில் 2ஆம் இடமும் தேசிய அளவில் 9ஆம் இடம் பெற்று பெருமை சேர்த்ததிற்கு நலச்சங்க சார்பில் பாராட்டு தெரிவித்து சிறப்பு  செய்யப்பட்டது. இவ்விழாவில் நலச்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்கத்தின் பொருளாளர்  சகாயராஜா விழா நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒருங்கிணைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.