ஒலிம்பிக் வீராங்கனை சுபாவிற்கு உற்சாக வரவேற்பு

0 582
Stalin trichy visit

திருச்சி, ஆக. 16 ஒலிம்பிக் வீராங்கனை சுபாவிற்கு உற்சாக வரவேற்பு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த தடகள வீராங்கனை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த முறை அவர் பதக்கம் பெற இயலாமல் போனாலும் இந்தியா சார்பில் தமிழகத்திற்கும், குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி , தாயகம் திரும்பும் , எளிமையான குடும்பத்தில் பிறந்தது தனது தொடர் முயற்சியால் ஒலிம்பிக் வரை சென்ற வந்த சுபா வெங்கடேசன் அவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.கண்ணன், பயிற்சியாளர் சுகந்தி, தடகள சங்க நிர்வாகிகள் இளங்கோ, நடராஜ், ஜோரோ , ஜீவானந்தம் சுபா உறவினர்கள், பள்ளி பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் சுபா வெங்கடேசனை வரவேற்று, பொன்னாடைகள், மாலைகள், மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாக வரவேற்றார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுபா வெங்கடேசன்,

கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டேன் இந்த முறை இரண்டாவது முறையாக பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். எங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து நாங்கள் அளித்து வருகிறோம் இருந்தாலும் பதக்கங்கள் பெற முடியவில்லை. வரும் காலங்களில் இன்னும் அதிகமாக பயிற்சியும் முயற்சியும் செய்து பதக்கங்களை வெல்வோம்.

மற்ற போட்டிகளை விட தடகள போட்டி மிகவும் கடினம் கடந்த காலங்களில் தடகள போட்டியில் பதக்கம் வாங்க முடியவில்லை தற்போது தான் பதக்கம் வாங்கி கொண்டு உள்ளோம் வரும் காலங்களில் இந்திய இன்னும் முன்னேறும் என தெரிவித்தார்

வினேஷ் போகட் குறித்த கேள்விக்கு அந்த விளையாட்டு பற்றி தெரியாது எனவே பதில் கூற முடியாது என தெரிவித்தார்

தமிழ் நாடு அரசு, ஸ்போர்ட்ஸ் அசோசியஷன் ஆகியவற்றிற்கு நன்றி

தமிழக முதல்வர் டோக்கியோ ஒலிம்பிக் சென்று வந்த பின்பு மின் வாரியத்தில் வேலை வழங்கினார் மேலும் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு நன்றி தெரிவித்தார்

இந்த முறை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதியிலிருந்து ஐந்து பேர் கலந்து கொண்டுள்ளோம். அது மிகவும் பெருமையாக உள்ளது. அதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களும் மிகுந்த ஆதரவாக எங்களுக்கு இருந்து வருகிறார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.