கூலி தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

0 195
Stalin trichy visit

திருச்சி, ஆக. 17 மணப்பாறை அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் ( 63 )இவர் அறிவால் கத்தி சாணம் தீட்டும் தொழில் செய்து வந்தார்.

இவருடன் வேலை பார்த்த அற்புத சேகர் என்பவர்நட்பு கிடைத்துள்ளது இருவரும் சேர்ந்து சாணம் தீட்டும் தொழில் செய்து வந்தனர். அடிக்கடி ரத்தினம் வீட்டுக்கு அற்புத சேகர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 28. 6 .2019 அன்று ரத்தினம் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு சென்று இருந்த அற்புத சேகர் வீட்டில் இருந்த அரை பவுன் தங்க நகை ரூ. 28 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்துச் சென்றதாக கூறி வையம்பட்டி காவல் நிலையத்தில் ரத்தினம் புகார் அளித்துள்ளார்

புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் அற்புத சேகர் புகார் கொடுத்த ரத்தினத்தின் வீட்டிற்கு சென்று என் மீது போலீசில் ஏன் புகார் கொடுத்தாய் எனக் கூறி தகராறு ஈடுபட்டுள்ளார் தகராறு முற்றிப் போக அற்புத சேகர் மறைத்து வைத்திருந்த அறிவாலை கொண்டு ரத்தினத்தை கொடூரமாக தாக்கியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த ரத்தினத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த வையம்பட்டி காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து அற்புத சேகர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இது குறித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று (16.08.2024)  விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில் ரத்தினத்தை கொலை செய்த அற்புத சேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் பணம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாத சிறை தண்டனை என திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.