சிறப்பான செயல்பாடு: ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு 2 ஆம் பரிசு

0 364
Stalin trichy visit

திருச்சி, ஆக. 17  உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும், அவைகளின் செயல் பாடுகளின் அடிப்படையிலும், போட்டி மனப்பான் மையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருது வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்தமைக்காக 2024-ம் ஆண்டுக்கான 2-வது பரிசு ச.கண்ணனூர் பேரூராட்சி பெற்றது.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதற்கான விருதை நகராட்சி நிர் வாக துறை அமைச்சர் கே.என். நேரு ச.கண்ண னூர் பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் வழங்கினார். மேலும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.