திருச்சியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
திருச்சி ஆக.19 அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி /சக்தி சார்பாக திருச்சியில் மாபெரும் சிலம்பப் போட்டி மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்றது,
இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவை கல்லூரி தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை ஏற்று வைத்தனர். அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் மாணவ மாணவிகள் 35 பேர் முதல் நிகழ்ச்சியாக தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் . இரண்டாவது நிகழ்ச்சியாக காவலர் மேனகா உலகில் மிகப்பெரிய மருதாணியில் (மெஹந்தி) 60 சதுர அடியில் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைந்து சாதனை படைத்து உள்ளார்.
உலக கலைகள் மற்றும் விளையாட்டு சங்கம் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலம்ப போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை காவலர் அரவிந்தன் மாணவ மாணவிகள் வென்றனர். இரண்டாவதாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசான் மணிகண்டன் மதுரை வீரன் சிலம்பாட்ட கழகம் பரிசு வென்றனர். மூன்றாவதாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசான் நவீன் ஏகலைவன் சிலம்பக்கூடம் பரிசு வென்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு நினைவு கல்லூரி தலைவர் பாலசுப்ரமணியன் திருச்சி ஓய்வு பெற்ற ரோட்டரி சங்கம் தலைவர் வளர்மதி , மாலா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி ரோட்டரி சங்கம் திருச்சி சக்தி தலைவர் , பொருளாளர் மற்றும் சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர். சிலம்பப் போட்டியை அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் தலைவர் முத்துராமலிங்கம் , செயலாளர் கீதா மற்றும் பயிற்சியாளர் அரவிந்த் ஏற்பாடு செய்திருந்தனர்.