கிணற்றில் இருந்து தாய் – மகள் சடலமாக மீட்பு

0 481
Stalin trichy visit

திருச்சி, ஆக.19  திருச்சி மாவட்டம், மணப்பாறை பொம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35) .இவரது மனைவி ஜமுனா ராணி (24 ). சுரேஷ் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது .  இவர்களுக்கு மோகனா ஸ்ரீ என்ற ஆறு வயது பெண் குழந்தையும் ஜஸ்வந் என்ற நான்கு வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில் நேற்று மாலை சுரேஷின் தந்தை கருப்பையா (65) வயலுக்கு சென்ற மருமகள் மற்றும் பேத்தியை காணவில்லை என தேடி பார்த்த போது அவர்களுக்கு சொந்தமான கிணற்றின் அருகில் ஜமுனா ராணியின் செருப்பு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கருப்பையா உடனடியாக மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத் துறையினர் 50 அடி ஆழமுள்ள கிணற்றுள் இறங்கி 10 அடிக்கு மேல் இருந்த நீரில் மூழ்கியிருந்த ஜமுனா ராணி மற்றும் அவரது மகள் மோகனா ஸ்ரீ இருவரையும் சடலமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மணப்பாறை காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.