கிணற்றுக்குள் மிதந்த வாலிபர் சடலம் : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஆக.23 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி, கே.கே. நகரை சேர்ந்த இக்பால் என்பவரது மகன் முகமதுஆசிக் (வயது 20). வேலையின்றி இருந்த இவர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள பாசன கிணற்றில் தற்போது 30 அடி தண்ணீர் உள்ள நிலையில் இன்று காலை கிணற்றினுள் முகமதுஆசிக் மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல் சடலமாக நீரில் மிதந்தது.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து துவரங்குறிச்சி போலீசார் முகமதுஆசிக் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமதுஆசிக்கின் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.