பெண் அணிந்திருந்த தாலியை திருடியவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அமயபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி துளசி மணி (28) . இவர் கடந்த 22 ம் தேதி அமையபுரம் சோலைராஜா கோவில் கும்பாபிஷேகத்தை அடுத்து அங்கு நடைபெற்ற 48வது மண்டல பூஜை அன்று அன்னதானம் சாப்பிட சென்றதாகவும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்த போது கழுத்தில் அணிந்திருந்த 5 கிராம் தாலியை காணவில்லை என வையம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வையம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சின்னதுரை (27) என்பவர் திருடியது தெரிய வந்தது . இதனை அடுத்து வையம்பட்டி காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.