ரூ.573 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய அரசு : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

0 205
Stalin trichy visit

திருச்சி ஆக. 28 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். 60 முதல் 40% வரை கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம் இதில் நீங்கள் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆனாலும் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அப்படியே உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு பலமுறை இது குறித்து கடிதம் எழுதி இருக்கிறோம் அதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிகள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்து தற்போது இத்தனை நாட்கள் ஆகியும் நிதி வராமல் இருப்பது தொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி விட்டுச் சென்றுள்ளார். ரூ. 573 கோடி மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வரவேண்டிய ரூ.249 கோடியும் ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அனைவருக்கும் கல்வி என்பதை மாநில அரசும் சொல்கிறது. ஒன்றிய அரசும் சொல்கிறது. அப்படி இருக்கும் போது நிதியை வழங்காமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. புதிய கல்வி கொள்கையில் இணைய வேண்டும் என ஒன்று அரசு தொடர்ந்து அழுத்தம் தருகிறதா என்ற கேள்விக்கு? நிச்சயம் அது உண்மைதான். பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் ஒன்றிய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்த கொள்கை. அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல. ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது.

கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் தமிழ்நாடு அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம் அதேபோன்றுதான் கல்விக்கான நிதி சுமையும் சமாளிக்க போகிறோம். கடுமையான நிதி சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் செய்வார்கள் என்று கூறினார். பேட்டியின் போது, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.