லால்குடியில் நாளை மின்தடை
திருச்சி, ஆக.30 திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 31 ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்தடை.
லால்குடியில் உள்ள ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு,மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.