ஆசிரியர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த கௌரவ விரிவுரையாளர்கள்

0 488
Stalin trichy visit

திருச்சி, செப். 5  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 40 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 15 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றோம். எங்களது கோரிக்கைகளை பல முறை தமிழக அரசிடம் கோரி வருகின்றோம். பல முறை கோரிக்கை வைத்தும் தமிழக உயர்கல்வித்துறை கண்டுகொள்ளாதது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

எனவே எங்களது வலிகளை உயர்கல்வித்துறைக்கு உணர்த்தும்விதமாக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் போற்றுகின்ற ஆசிரியர் தினமான செப்டம்பர் 05 ம் நாளை கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவெடுத்து இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து நாங்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் கீழ்காணும் அடிப்படைக் கோரிக்கைகளான

கடந்த பதினொரு 11 மாதங்களாக கொளரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் அரசு உடனே ஊதியத்தினை வழங்கிட வழியுறுத்துகிறோம்.

பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக இருந்து அரசுக் கல்லூரியாக மாறிய 41 கல்லூரிகளில் விடுபட்ட பாடப்பிரிவுகளை இணைத்து அதில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டுகிறோம்.சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு 28.01.2019 முதல் ரூ.50,000 மாத ஊதியம் முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டுகிறோம்.

சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை அரசாணை 56ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்.

லால்குடி, ஒரத்தநாடு உள்ளிட்ட சில அரசுக் கல்லூரிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் காரணமாக மிகை பணியாளராக (Excess Staff) பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

நிரந்தரப் பேராசியரியர் பணியிட மாறுதலின் போது பணியில் உள்ள கௌரவ விரிவுரையாளர் மற்றும் அலுவலகப் பணியாளர் பணியிடங்களை காலிப் பணியிடமாக அறிவிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

வருங்கால வைப்பு நிதி (PF) பிடித்தம் செய்யப்பட்டு அரசின் பங்களிப்புடன் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணப் பயன்கள் கிடைக்க வழிவகை செய்திட வேண்டுகிறோம்.

பணி காலத்தில் இறந்த கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டுகிறோம்.

பெண் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பெண் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டுகிறோம்.

ஆண்டுக்கு 15 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டுகிறோம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கருப்பு அணிந்தும் பணியில் ஈடுபட்டனர்.எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் எனவும் மேலும் எங்களது கோரிக்கை மனுவினை உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.