எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 160
Stalin trichy visit

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி  தேச விரோதி என்று பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச் ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்  தலைமையில், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி மற்றும் திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கண்டன உரையாற்றினார்.

நிகழ்வில் பொருளாளர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே ஆர் ராஜலிங்கம், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ், மீனவரணி தனபால், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், இலக்கிய அணி பத்மநாபன், ஊடக பிரிவு செந்தில், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா படேல், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, அரியமங்கலம்
அழகர், புத்தூர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் பொன் தமிழரசன், கதிரேசன், பாதயாத்திரை நடராஜன், அபுதாகிர், பொன்னன், பட்டேல், மாரீஸ்வரி, பிச்சுமணி, ஜெயராஜன், யோகநாதன், தியாகராஜன், தினேஷ் குமார் ஹீரா, ஆரிப், பாண்டியன், ஜாகிர் உசேன், ரவி, ஆப்ரகாம், சையது, கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், வீரமணி, எழில் உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.