மனைவி கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை
மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியருக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 26.04.2022-ந்தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய பகுதியில் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் எதிரியான ஸ்ரீரங்கம் கண்டித்தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 66), த.பெ.ரெங்கநாதன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 04.08.22-ந்தேதி மேற்படி எதிரி சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்களால் மேற்படி எதிரி சுரேஷ் என்பவருக்கு 307 இ.த.ச பிரிவு-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ,10,000/- அபராதமும், 294(b) இ.த.ச பிரிவு -ன்படி ரூ.1000/- அபராதமும், 341 இ.த.ச பிரிவு -ன்படி ரூ.500/- அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000/- நிவாரண தொகை வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி பாரட்டினார்.