காதலியை அழைத்து சென்ற காதலனை தாக்கிய ந.த.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது
மணப்பாறை அருகே காதலியை அழைத்து சென்ற காதலனை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் கடந்த 14 ம் தேதி வீட்டை விட்டு ஓடி மதுரை அருகே இலுப்பைக் குளத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் 16 ம் தேதி பெண்ணின் உறவினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணகிரி மற்றும் சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவின் குமார் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து காதலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி வந்துள்ளதோடு சாதி பெயரை சொல்லி சந்தோஷின் செல்போன் 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சந்தோஷின் மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி விட்டு அவரின் பெற்றோரை வரச் சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் அருணகிரி உள்ளிட்ட 3 பேரை வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.