லாரி டிரைவர் மீது தாக்குதல் : காவல்துறையினர் விசாரணை
திருச்சி செப் 20 – திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டயம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 38)இவர் லாரி டிரைவர், கடந்த 8 மாதத்திற்கு முன்பு இவர் மணல் குவாரியில் ராகுல் என்பருடன் இணைந்து லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ராகுல்,பிரசாத் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பிரசாந்த் தனது மாமா இளங்கோவுடன் சம்பவத்தன்று விட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு வந்த ராகுல் இளங்கோவனிடம் தகராறில் ஈடுபட்டார்.
பிறகு அங்கு உள்ளவர்கள் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சம்பவதன்று இரு சக்கர வாகனத்தில் பிரசாந்த் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் ஒரு கார் கம்பெனி அருகில் வரும் பொழுது திடீரென்று அவரை ராகுல் வழிமறித்து தாக்கிவிட்டார்.இது குறித்து பிரசாந்த் திருவரங்கம் போலீஸ் புகார் கொடுத்தார் வழக்கு பதிவு செய்து ராகுலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.