3 தனியார் மருத்துவமனைகளில் ஏசி இயந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு

0 146
Stalin trichy visit

திருச்சி செப் 20 – திருச்சி தென்னூர் ஹை ரோட்டில் ஐந்தாவது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள குளிர்சாதன பெட்டியின் காப்பர் வயரை மர்ம ஆசாமி திருடி சென்று உள்ளான். இது குறித்து சாதிக் பாஷா என்பவர் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோன்று தில்லைநகர் 11வது கிராஸ் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த காப்பர் வயரரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர் பன்னீர்செல்வம் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் தில்லைநகர் மேற்கு பகுதி 8 கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் இருந்த காப்பர் வயரை மர்ம ஆசாமி திருட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர் ஜெய்சங்கர் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனியார் மருத்துவமனையில் ஏசி காப்பர் வயர்ரை திருடிய மர்ம நபர்களை  போலீசார்  தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.