சாரநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்சி சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் கலந்து கொண்டு 644 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் 22 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளரி ரவீந்திரன் வரவேற்று பேசினார்.பட்டமளிப்பு தின அறிக்கையை கல்லூரி முதல்வர் வளவன் சமர்ப்பித்தார். விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக அளவில் தர வரிசை பட்டியலில் 18 இடங்களைப் பெற்றவர்களுக்கும், தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசு தொகையையும் வழங்கி பேசினார்.