உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்பு மாரத்தான் போட்டி

0 178
Stalin trichy visit

திருச்சி, செப்.23 பொதுமக்களிடம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் நேற்று (செப்.22) நடைபெற்ற மாரத்தான் போட்டியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, 21 கிலோமீட்டர் தூரம் ஓடினார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி மருத்துவமனை குழுமத்திற்கு சொந்தமான, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான “மா காவேரி” என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை சார்பில், பொதுமக்களிடம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மராத்தான் போட்டிகள் இன்று நடைபெற்றன.

இன்று அதிகாலை, 4.30 மணிக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரத்தான் போட்டிகளை துவக்கி வைத்து, அவரும் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த மராத்தான் ஓட்டம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் பாலக்கரை வழியாக மீண்டும் மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது.

மொத்தம், 21 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வந்த அமைச்சர் உள்ளிட்டோருக்கு, மருத்துவமனை செயல் இயக்குனர் செங்குட்டுவன் பதக்கங்களை வழங்கி நன்றிகளை தெரிவித்தார்.

மேலும், 21 கிலோமீட்டர் 5 கிலோ மீட்டர், 2 கிலோமீட்டர் என்று மூன்று பிரிவுகளாக நடந்த மராத்தான் ஓட்டத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறிப்பாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் இப்போட்டிகளில் அதிகளவு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.