பைக்கில் வீலிங் செய்த இளைஞர் பேருந்தில் மோதி படுகாயம்

0 522
Stalin trichy visit

திருச்சி, செப். 26  திருச்சி மாவட்டம் ரெட்டைவாய்க்கால், வாசன் வேலி பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் லோகேஷ்குமார்(18). இவர் கடந்த 15 தேதி மண்ணச்சநல்லூரிள்ள அவர்களது நண்பர் சதீஷ்குமாரை பார்க்க வேண்டி தனது YAMAHA R 15 இருசக்கர வாகனத்திலும், திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதில் நண்பர்கள் ஒரு டூவீலரிலும், லோகேஷ்குமார் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர். இந்நிலையில் மாலை சுமார் 5.40 மணியளவில் நொச்சியம் அடுத்துள்ள அத்தானி அருகே லோகேஷ்குமார் வந்துபோது தனது இருசக்கர வாகனத்தை வீலிங் செய்து நண்பர்களை வீடியோ எடுக்க சொல்லி மண்ணச்சநல்லூர் துறையூர் புறவழிசாலையில் சாகசம் செய்துள்ளார்.

அப்போது துறையூரில் இருந்து திருச்சி நோக்கி எதிர் திசையில் வந்த தனியார் பேருந்தின் மீது லோகேஷ்குமார் ஓட்டிவந்த கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதை சுதாரித்த பேருந்து ஓட்டுநர் சடன் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியதால் சிறுவன் லோகேஷ்குமார் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை குறித்து விசாரணை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதையடுத்து காயம் ஏற்ப்பட்ட லோகேஷ்குமாரை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தை குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் கெளதம்(34) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- மண்ணச்சநல்லூர் 0 துறையூர் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. இருப்பினும் ஓட்டுநர் கவனாமாக ஓட்டினாலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடைக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற இளைஞர்கள்,சிறுவர்கள் வாகனத்தை இயக்க தெரியாமல் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்தி அவர்களுக்கும் காயம், உயிர் சேதம் ஏற்பட்டு இவர்களால் மற்ற வாகனங்களும் விபத்துக்கள் நேரிடப்படுகிறது.  எனவே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.