ஜமால் முகமது கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு முகாம்
திருச்சி, அக். 14 திருச்சி, மாவட்டம், மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முது கலை சமூக பணித்துறை சார்பில் கிராமிய விழிப்புணர்வு மூகாம் நடைபெற்றது. இந்த முகாமானது “எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்” என்ற தலைப்பில் முகாம் நடைபெற்றது.
முகாமை பூனாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரி கிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் துவக்கி வைத்தனர்.
முகாமின் முதல் நாளில் பூனாம்பாளையம் பள்ளியில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் துரித உணவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து “கை கழுவுதல் முறைகள்” பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
இரண்டாம் நாள் : பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள கலையரங்க மேடையில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஐ கேர் மருத்துவ குழுவினர் மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
மனநல சமூகப் பணியாளர் டாக்டர் மனோஜ் மாயகிருஷ்ணன் கல்வி மற்றும் மன நல ஆரோக்கியம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மூன்றாம் நாள்: புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பெண்கள் பயன்பெறும் வகையில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
நான்காம் நாள் : சுகாதார கணக்கீடு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுக்கு இயற்கை காட்சி எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது பின்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அங்குள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டது.
ஐந்தாம் நாள்: பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகளை உடல் நிறை குறியீடு எடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் வருகை புரிந்தனர். ஆண் பெண் சமத்துவம் மற்றும் உரையாடல் நடைபெற்றது.
ஆறாம் நாள்: கால்நடை வளர்ப்பு பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி, போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று : ‘பசுமைப் புரட்சியின் சமூகப் பணி மாணவர்களின் பங்கு’ , ‘இளைஞனே எழுந்து வா’ ‘இளைஞர்களின் முன்னேற்றம்’ மற்றும் ‘சிறகடித்துப் பற’போன்ற தலைப்புகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த முதுகலை சமூகப் பணித்துறை நடத்திய கிராமிய விழிப்புணர் முகாமிற்கு ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலநாதன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், முன்னாள் தலைவர், வார்டு உறுப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், முதுகலை சமூக பணித்துறை 17 மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.