வளநாடு அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

0 458
Stalin trichy visit

திருச்சி, அக்.14  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தேனூர் போலம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 53). இவர் கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் போலம்பட்டிடல் உள்ள பெருமாளின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க செயின் ஒன்றும், அதே போல் பெருமாள் வீட்டிற்கு அருகில் உள்ள முருகையா என்பவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 பவுன் தங்கச் செயின் ஒன்றும், சுமார் 4 கிராம் மோதிரம் ஒன்றும், அதேபோல் அருகில் இருந்த ராமசாமி என்பவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்கச்செயின் ஒன்றும், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயுள்ளது. இதில் மொத்தம் 3  1/2 சவரன் நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெருமாள் வளநாடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.