போதைப் பொருட்கள் ஆட்சி : முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசும் போது.
இந்த ஆட்சியில் உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை, கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம், ஆனால் வேறு மரணங்கள் நிகழ்ந்தால் ரூ.3 லட்சம், தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே போதைப் பொருட்கள் நிறைந்து இருக்கின்றது. கருணாநிதி ஆட்சி காலத்தில் சாரயக்கடைகள் திறக்கப்பட்டது. இப்போது அவரது மகன் ஸ்டாலின் முதலச்சராக உள்ள நிலையில் எங்கு திரும்பினாலும் கஞ்சா, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை. கஞ்சா என்பது பள்ளி கல்லூரிக்கு முன்பு எளிதாக கிடைக்கின்ற வகையில் இந்த ஆட்சி சட்டத்தை விட்டு விட்டு போதைக்கு அடிமையாகின்ற வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த போது அனைவருக்கும் பாதுகாப்பு இருந்தது. தி.மு.க வினரே அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதுமே எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.