மணப்பாறை அருகே புதிய நியாய விலை கடைகள் திறப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கத்திக்காரன்பட்டி மற்றும் முத்தப்புடையான்பட்டியில் தலா ரூ13.30 லட்சம் மதிப்பிலும், கள்ளிப்பட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் குத்து விளக்கு ஏற்றிய எம்.எல்.ஏ., மக்களுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய பொதுமக்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். விரைவில் கண்ணுடையான்பட்டியில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
விழாவில் மணப்பாறை வட்டாட்சியர் செல்வம், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்ஏஎஸ். ஆரோக்கியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் காமராஜ், மரியபாக்கியராணி, ராஜலெட்சுமி செல்வராஜ், கண்ணுடையான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணிமுருகன், அரசு அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், விற்பனையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தங்கள் பகுதியிலேயே நியாய விலைக் கடை அமைத்துத் தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.