பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் லாரி உரிமையாளர் சம்மேளனம் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

0 690
Stalin trichy visit

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் கருப்பு கொடியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் திரண்ட அவர்கள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்,மாநில அரசு விலையை குறைக்கின்றோம் என்று கூறிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்  என்று முழக்கம் இட்டனர்.ஏற்கனவே ஊரடங்கால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் லாரி உரிமையாளர்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் பாதிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.