வாமடம் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் – அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சிகலைஞர் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில்
திமுக சார்பில் 50-வது வட்ட செயலாளர் வாமடம் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் 5 கிலோ அரிசி,காய்கறி, சனிடைசர் மற்றும் விட்டமின் சி மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு 1000 பேருக்கு வழங்கினார்… இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகரச் செயலாளர் அன்பழகன் பகுதி செயலாளர் காஜாமலை விஜி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்